உயிருடன் சவப்பெட்டியில் புதைக்கப்பட்ட பெண்: 11 நாட்கள் போராடி உயிரிழந்த சம்பவம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

இறந்துவிட்டதாக கூறப்பட்டு சவப்பெட்டியில் புதைக்கப்பட்ட பெண், 11 நாட்கள் அதில் இருந்து வெளியே வர போராடி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம அவரது குடும்பத்தினருக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலின் Riachão das Neves பகுதியைச் சேர்ந்தவர் Rosangela Almeida dos Santos(37).

திருமணமான இவருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கடந்த 28-ஆம் திகதி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரது குடும்பத்தினர் Rosangela Almeida dos Santos-ஐ மருத்துவனையில் அனுமதித்து சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளனர்.

தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் திடீரென்று மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதன் பின் இறந்தவர்களுக்கு என்ன சம்பிரதாயங்கள் செய்வார்களோ அதை எல்லாம் மேற்கொண்டு ஒரு சவப்பெட்டியில் அவரது உடலை வைத்து புதைத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் புதைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து ஏதோ சத்தம் வருவதாக அங்கிருக்கும் உள்ளூர் வாசியிடம் கூறியுள்ளனர்.

ஆனால் அவரோ இதை விளையாட்டாக எண்ணி அங்கு சென்று கேட்ட போது, அவருக்கும் அது போன்ற சத்தம் கேட்டுள்ளது.

இதனால் உடனடியாக அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் வந்து புதைக்கப்பட்ட சவப்பெட்டியை திறந்து பார்த்த போது, Rosangela Almeida dos Santos-ன் கால் நகங்களில் இரத்தம் வழிந்துள்ளன, அதுமட்டுமின்றி அதில் அவர் வெளியேறுவதற்கு போராடியுள்ளார்.

சவப்பெட்டியின் பல பகுதிகளில் இரத்தக் கறைகள் இருந்துள்ளன. உடனடியாக அவரை வெளியே எடுத்த போது பரிதாபமாக இறந்து கிடந்துள்ளார்.

இது குறித்து அவரின் தாயார் Germana de Almeida கூறுகையில், இந்த தகவல் அறிந்தவுடன் உடனடியாக விரைந்து வந்து சவப் பெட்டியை எடுத்தோம்.

ஆனால் அவர் இறந்துவிட்டால், அவள் உடலில் ஒரு சில இடங்களில் உயிருக்கு போராடிய காயங்கள் இருந்தன், கடந்த 28-ஆம் திகதி புதைத்த நாங்கள் அவளை பிப்ரவரி 9-ஆம் திகதி வெளியில் எடுத்தோம்.

சுமார் 11-நாட்கள் உயிருக்கு போராடி இறந்துள்ளார் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

மேலும் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது அந்த பெண்ணின் பெற்றோர் புகார் அளித்துள்ளதால் பொலிசார் இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்