உலகின் பணக்கார பயங்கரவாத அமைப்புகளின் பட்டியல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
170Shares
170Shares
lankasrimarket.com

உலகின் மிகக் கொடூரமான பயங்கரவாத அமைப்புகள் பலவும் செல்வச் செழிப்பிலும் மிகுந்து காணப்படுவதாக புதிய ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

பயங்கரவாதத்தை முன்னெடுக்க பணம் முக்கியம் என்ற நிலையில், பயங்கரவாத அமைப்புகள் அனைத்தும் நிதி திரட்டுவதில் ஒரே கொள்கையை கடைபிடிக்கின்றன.

போதை மருந்து கடத்தல், ஆயுத வியாபாரம், வங்கிக் கொள்ளை, ஆட் கடத்தல் அல்லது பாதுகாப்புக்கு என பணம் என பல்வெறு வழிகளில் உலகெங்கிலும் உள்ள பயங்கரவாத அமைப்புகள் நிதி திரட்டி வருகின்றன. குறித்த பணக்கார பயங்கரவாத அமைப்புகளில் முதலிடத்தில் ஈரான் நாட்டில் இருந்து செயல்படும் ஹெஸ்பொல்லா அமைப்பு உள்ளது.

இந்த அமைப்பின் ஆண்டு வருவாய் என்பது சுமார் 1.1 பில்லியன் டொலர் என தெரியவந்துள்ளது. மட்டுமின்றி லெபனான் நாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்புக்கு இவர்கள் அளிக்கும் நிதி உதவியானது ஆண்டுக்கு 800 மில்லியன் டொலர் என கூறப்படுகிறது.

இரண்டாவது இடத்தில் ஆண்டுக்கு 800 மில்லியன் டொலர் வருவாய் உடன் தலிபான் அமைப்பு உள்ளது. இந்த அமைப்பின் முக்கிய வருவாயானது, போதை மருந்து கடத்தலுக்கு பாதுகாப்பு அளிக்கும் நடவடிக்கையில் இருந்து பெறப்படுவதாக கூறப்படுகிறது.

3-வது இடத்தில் ஆண்டுக்கு 700 மில்லியன் டொலர் வருவாயுடன் பாலஸ்தீனிய இஸ்லாமிய இயக்கமான ஹமாஸ் உள்ளது.

4-வது இடத்தில் 300 மில்லியன் டொலர்களுடன் அமெரிக்காவையை கதிகலங்க வைத்த அல் கொய்தா பயங்கரவாத அமைப்பு உள்ளது.

5-வது இடத்தில் ஆண்டுக்கு 200 மில்லியன் டொலர்கள் வருவாய் ஈட்டும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு உள்ளது. அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 பயங்கரவாத அமைப்புகளின் பட்டியல்:

  1. Hezbollah - 1.1 பில்லியன் டொலர்
  2. Taliban - 800 மில்லியன் டொலர்
  3. Hamas - 700 மில்லியன் டொலர்
  4. Al Qaeda - 300 மில்லியன் டொலர்
  5. ISIS - 200 மில்லியன் டொலர்
  6. PKK - 180 மில்லியன் டொலர்
  7. Kata’ib Hizballah - 150 மில்லியன் டொலர்
  8. Palestinian Islamic Jihad - 100 மில்லியன் டொலர்
  9. Lashkar-e-Taiba - 75 மில்லியன் டொலர்
  10. Real IRA - 50 மில்லியன் டொலர்

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்