விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் தலையை பிடித்த சிங்கம்: வைரலாகும் வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

சவுதி அரேபியாவில் சிறுமியை சிங்கம் கடித்து குதற முற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரத்தில் வசந்தகால விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் சிங்கக் குட்டியுடன், குழந்தைகள் ஓடி விளையாடும் விளையாட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன் படி இந்த திருவிழாவின் போது ஏராளமான குழந்தைகள் சிங்கக்குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தான்ர். அப்போது திடீரென்று அந்த சிங்கம் ஒரு சிறுமியின் தலையை பிடித்து கடித்து குதற முற்பட்டது.

இதைக் கண்ட மற்ற குழந்தைகள் பயத்தில் கத்த ஆரம்பித்தனர். அதன் பின் உடனடியாக அங்கு வந்த சிங்கத்தின் பயிற்சியாளர் சென்று சிறுமியை மீட்டார்.

அதில், சிறுமி காயமடைந்தார். இது குறித்த சம்பவங்கள் அங்கிருப்பவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளதால், வைரலாகி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்