காரில் மோதி சாகவிருந்த மகன்: தன் உயிரை பற்றி நினைக்காமல் தாய் எடுத்த துணிச்சல் முடிவு

Report Print Santhan in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

சீனாவில் மகனை காப்பாற்றுவதற்காக தாய் எடுத்த துணிச்சல் முடிவால் அவர் காரில் அடிபட்டு சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீனாவின் Guizhou மாகாணத்தின் Wanshuizhen பகுதியில் இருக்கும் Kaili என்ற இடத்தில் கடந்த 7-ஆம் திகதி பகல் நேரத்தில் ஒரு வயது சிறுவன் சாலையை கவனிக்காமல் ஓடியுள்ளான்.

அப்போது அந்த சாலையில் வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை மீறி வேகமாக வருவதைக் கண்ட அந்த சிறுவனின் தாய், மகனை காப்பாற்றுவதற்காக வேகமாக ஓடியுள்ளார்.

ஆனால் காரானது அதற்கு சிறுவனை மோதிவிட்டு சென்றது. தடுக்க வந்த தாய் அந்த காரில் அடிபட்டு கீழே விழுந்தாள். இதில் அதிர்ஷ்டவசமாக சிறுவன் தப்பித்துள்ளான்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் அங்கிருக்கும் கமெராவில் பதிவாகியதால் தற்போது அது வைரலாகி வருகிறது.

மகனை காப்பாற்ற நினைத்து தன் உயிரைப் பற்றி நினைக்காமல் காரில் அடிபட்டு விழுந்த தாயாருக்கு சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் அந்த சிறுவனுக்கு காயங்கள் ஏற்படவில்லை எனவும், இருப்பினும் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்