கரப்பான பூச்சியை கொல்ல நினைத்த கணவரால் பற்றி எரிந்த வீடு: கடவுளுக்கு நன்றி சொன்ன மனைவி

Report Print Santhan in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

அவுஸ்திரேலியாவில் கரப்பான் பூச்சியை கொல்ல முயன்று வீடே பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து பகுதியைச் சேர்ந்த தந்தை ஒருவர் கரப்பான் பூச்சி தொல்லை தாங்க முடியாமல் தவித்து வந்துள்ளார்.

இதனால் இதற்கும் முடிவு கட்ட வேண்டு என்று கடந்த புதன் கிழமை இரவு தன் வீட்டின் சமயலறையில் இருக்கும் கரப்பான பூச்சியை ஒழிக்கத் தொடங்கினார்.

அதன் வீட்டின் சமையலறையில் மருந்து ஸ்ப்ரே செய்து கரப்பான் பூச்சியை தேடி தேடி அழித்தார்.

ஆனால் எதிர்பாராதவிதமாக அடுப்பில் எரிந்துகொண்டிருந்த தீயில் மருந்து பட்டு தீப்பற்றியது. தீ கொளுந்துவிட்டு எரியத்தொடங்கியதால், பதற்றமடைந்த அவர் கூச்சலிட்டார். இதை கேட்டு வீட்டில் இருந்தவர்கள் அவரை வெளியே இழுத்து வந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இது குறித்து அவரின் மனைவி Bernice கூறுகையில், கணவர் விட்டின் சமயலறையில் கரப்பான பூச்சியை அழித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாரதவிதாம தீப்பற்றி எரிந்துவிட்டது.

ஆனால் அதிர்ஷ்டவசாம வீட்டில் உள்ளே இருந்த எங்கள் மூன்று குழந்தைகள் வெளியில் வந்துவிட்டனர்.

கணவருக்கு மட்டும் சிறிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ளது, எந்த உயிர் சேதமும் ஏற்படாமல் காப்பாற்றிய கடவுளுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த தீவிபத்தின் காரணமாக விட்டின் முன் பகுதி முற்றிலும் எரிந்து சாம்பலாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்