தேனிலவு முடிந்த கையோடு விவாகரத்துக்கு விண்ணப்பித்த புதுமாப்பிள்ளை: பகீர் காரணம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

துபாயை சேர்ந்த புதுமாப்பிள்ளை திருமணமான சில நாட்களிலேயே விவாகரத்து கோரிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர் ஒருவருக்கும், பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் புதுமண தம்பதி ஐரோப்பிய நாட்டுக்கு தேனிலவு சென்றுள்ளனர்.

தேனிலவு முடிந்து சொந்த ஊருக்கு வந்த உடனேயே மனைவியிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என நீதிமன்றத்தில் புதுமாப்பிள்ளை வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், தேனிலவில் மனைவி தன்னுடன் நெருக்கமாக இல்லை எனவும், தனது பணத்தை வீணாக்குவதாகவும் கூறியுள்ளார்.

அதே நேரத்தில், தனது கணவர் முரட்டுதனமாக நடந்து கொண்டதாகவும், பணத்தை செலவழிக்க கஞ்சத்தனம் பட்டதாகவும் மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்