ஈரான் விமான விபத்து தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்: மணப்பெண் நண்பர்களுடன் பலி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

ஈரானில் விபத்துக்குள்ளான துருக்கி விமானத்தில் மணப்பெண்ணும் அவரது தோழிகள் 7 பேரும் இருந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

துருக்கி நாட்டு தொழிலதிபரான ஹுசைன் பசரன் என்பவரின் மகளும் அவரது தோழியர் 7 பேரும் இந்த விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

28 வயதான மினா பசரன், ஐக்கிய அமீரகத்தின் துபாயில் விருந்து ஒன்றில் கலந்து கொண்டு தமது தோழிகளுடன், தந்தைக்கு சொந்தமான அந்த விமானத்தில் இஸ்தான்புல் புறப்பட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையிலேயே விமானம் ஈரான் அருகே மலையில் மோதி விபத்தில் சிக்கியுள்ளது.

மினா பசரன் எதிர்வரும் 14 ஆம் திகதி துருக்கி தலைநகரில் வைத்து தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் செய்து கொள்ள இருந்தார்.

திருமணத்திற்கு பின்னர் தமது தந்தையின் தொழில் அனைத்தையும் தலைமை ஏற்று நடத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மோசமான வானிலை காரணமாகவே இந்த விமான விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றது.

மட்டுமின்றி விபத்து நடந்த பகுதிக்கு மீட்பு குழுவினர் செல்லவும் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்