அரைநிர்வாணமாக இருக்கும் பெண்களிடம் புகைப்படம்: தனக்கு தானே ஆப்பு தேடிக் கொண்ட பொலிசார்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
0Shares
0Shares

மெக்சிகோவில் அரைநிர்வாணமாக இருக்கும் பெண்களிடம் புகைப்படம் எடுத்த பொலிசார் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மெக்சிகோவின் Cancun பகுதியில் இருக்கும் கடற்கரையில் பொலிசார் ஒருவர் அரைநிர்வாணமாக இருக்கும் சுற்றுலாப் பயணிகளான இரண்டு பெண்களிடம் புகைப்படம் எடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்களை குறித்த பெண்கள் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இது வைரலானதால், பொலிசார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து தெரிவிக்கையில், பொலிசார் பெண்களிடம் புகைப்படம் எடுக்கும் போது உடை அணிந்துள்ளனர். உடைக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது, அதுமட்டுமின்றி அவர்கள் துப்பாக்கி வேறு வைத்திருந்தனர்.

அதை கூட கண்டுகொள்ளாமல் அவர் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். Cancun கடற்கரைக்கு உலகின் பல்வேரு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

இதனால் அவ்வப்போது திடீரென்று அங்கு வன்முறைகள் நிகழும் அதன் காரணமாகவே பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொலிசார் இப்படி துப்பாக்கி வைத்திருக்கும் நிலையில் பெண்களிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டதால், பெரிதும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிசாரிடம் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு Cancun பகுதியில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்