நிலச்சரிவில் சிக்கிய பெண் உயிரோடு புதைந்த பரிதாபம்: பதை பதைக்க வைக்கும் வீடியோ காட்சி

Report Print Santhan in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

பெருநாட்டில் நிலச்சரிவில் சிக்கிய பெண் உயிரோடு புதையும் காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பெருநாட்டில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதிலும் குறிப்பாக Paucartambo மாகாணத்தின் Huancarani பகுதியில் கடுமையான மழை பெய்து வருவதால் அங்கிருக்கும் மலைப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.

வீடியோவை காண

இந்நிலையில் அங்கிருக்கும் மலைபகுதியை ஏராளமானோர் கடந்து செல்லும் போது திடீரென்று பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்படுவதற்கான அறிகுறி தென்பட்டது.

இதனால் கடந்து சென்றவர்கள் உடனடியாக அப்பகுதியை விரைவில் கடக்க வேண்டும் என்று ஓடினர். அப்போது 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வேகமாக கடக்காமல் பொறுமையாக நடந்து சென்றுள்ளார்.

இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் வேகமாக வரும் படி கூறியுள்ளனர். ஆனால் காதில் வாங்காமல் இருந்ததால் மலையில் பாதியளவு சரிந்து அந்தப் பெண் மீது விழுந்தது. இதன் காரணமாக அப்பெண் உயிரோடு புதைந்து இறந்தார்.

இது தொடர்பான காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் அங்கிருக்கும் ஊடகங்கள் இது குறித்து தெரிவிக்கையில், நிலச்சரிவில் சிக்கி இறந்த பெண் மது அருந்தியிருந்ததாக தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்