கூட்டுப்படைகளின் அதிரடி தாக்குதல்: சிரியா மக்களின் ஆதரவு யாருக்கு?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
Cineulagam.com

அமெரிக்க கூட்டுப்படைகளின் அதிரடி தாக்குதல் முடிவுக்கு வந்த சில மணி நேரங்களில் தேசிய கொடிகளுடன் வீதிக்கு வந்த சிரியா மக்கள் ஆசாத் அரசுக்கு ஆதரவாக பேரணி நடத்தியுள்ளனர்.

அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் இணைந்து சிரியா மீது மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் ரசாயன ஆலை ஒன்றும் ஆயுத கிடங்குகள் மற்றும் ராணுவம் தளம் ஒன்றும் முற்றாக சேதமடைந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆனால் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் சிரியா மற்றும் ரஷ்யா தரப்பில் இருந்து வெளியாகவில்லை.

இதனிடையே கூட்டுப்படைகளின் தாக்குதல் முடிவுக்கு வந்த சில மணி நேரங்களில், ஆசாத் அரசுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான மக்கள் வீதிக்கு வந்து பேரணி நடத்தியுள்ளனர்.

வெள்ளி இரவு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சுமார் 110 ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன. இதனால் சிரியா வானம் ஏவுகணை வெளிச்சத்தில் மிதந்துள்ளது.

கூட்டுப்படைகளின் ஒருங்கிணைந்த தாக்குதலை சிரியா தடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை அமெரிக்க தரப்பு அதை உறுதி செய்யவில்லை.

மாறாக ரஷ்ய தரப்பு, சுமார் 71 ஏவுகணைகளை தடுத்து அழித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

இதனிடையே பேரணியில் ஈடுபட்ட சிரியா மக்கள் ஜனாதிபதி ஆசாத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன், ஆசாத்தின் புகைப்படங்களையும் பதாகைகளாக கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்