மீண்டும் தாக்குதல் நடத்த தயாராக உள்ளோம்! சிரியாவுக்கு அதிரடி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
336Shares
336Shares
lankasrimarket.com

ரசாயன ஆயுதங்களை மீண்டும் சிரியா பயன்படுத்தினால், அதன் மீது தாக்குதல் தொடுப்பதற்கு அமெரிக்கா மீண்டும் தயாராக உள்ளது என டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.

சிரியா அரசு ராணுவ தளங்களில் ஏவுகணை தாக்குதல்களை நேற்று அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் நடத்தின.

கடந்த சனிக்கிழமை சிரியாவின் டூமா நகரில் நடைபெற்றதாக சந்தேகிக்கப்படும் ரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்நாடுகள் கூறின.

நேற்று இரவு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தாக்குதல் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் (இந்தத் தாக்குதலில் பயன்படுத்திய) அறிவுக்கும் படை வலிமைக்கும் நன்றி கூறியுள்ளார். இதைவிட சிறப்பாக செய்திருக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர் நோக்கம் நிறைவேறியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தான், ரசாயன ஆயுதங்களை மீண்டும் சிரியா பயன்படுத்தினால், அதன் மீது மீண்டும் தாக்குதல் தொடுப்பதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது என டிரம்ப் எச்சரித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்