கைகளால் நடந்து கொண்டே காரை இழுக்கும் அதிசய மனிதர்!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

எத்தியோப்பியாவில் நபர் ஒருவர், கைகளால் நடக்கும் கலையில் 'Master' பட்டம் பெற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

எத்தியோப்பியாவின் டிக்ரே நகரைச் சேர்ந்தவர் டிரார் அபோஹோய்(32). இவர் தனது 9வது வயதில் சீன, அமெரிக்க படங்களின் தாக்கத்தால் கைகளால் நடக்க ஆரம்பித்துள்ளார்.

கைகளால் நடக்க பயிற்சி மேற்கொண்ட டிரார், அதன் பிறகு தார் சாலை, மலைப்பாதை, மாடிப்படிகள் என எந்த இடமாக இருந்தாலும் வெறும் கைகளால் நடக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘திரைப்படங்களில் தலைகீழாக நடக்கும் காட்சிகளில் தொழில்நுட்பமும், படத்தொகுப்பும் பங்குவகித்திருக்கும் என்று அப்போது எனக்கு தெரியாது.

அது உண்மை என்று நினைத்துதான் இந்த பயிற்சியில் இறங்கினேன். ஆரம்பத்தில் மிகவும் கடினமாக இருந்தது. தோள்பட்டையும், கைகளும் பயங்கரமாக வலித்தன. வெறும் கைகளால் நடப்பதால் புண்ணாகிவிட்டன.

வீட்டில் எவ்வளவோ தடுத்துப் பார்த்தார்கள். நான் என்னுடைய லட்சியத்தில் உறுதியாக இருந்தேன். வீட்டில் நடக்க ஆரம்பித்து, பிறகு சாலைகளில் நடக்க ஆரம்பித்தேன்.

சிலர் என்னைப் பார்த்து வியந்தார்கள். சிலர் சிரித்தார்கள். பிறகு காடு, மலை, மாடிப்படிகள் என்று முன்னேறினேன். இப்போது காலையில் 3 மணி நேரமும், மாலையில் 3 மணி நேரமும் பயிற்சி செய்கிறேன்.

இடுப்பில் ஒரு கயிறைக் கட்டி, கைகளால் நடந்தபடி காரை இழுத்துச் சென்றிருக்கிறேன். மேலும், என் முதுகில் ஒருவரை அமர வைத்து, கைகளால் நடந்து சென்றிருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

கைகளால் நடக்கும் கலையில் 'Master' பட்டம் வென்றுள்ள டிரார், விரைவில் கின்னஸ் சாதனை படைக்க உள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Gazeta Telegraf

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்