சிரியாவில் நடந்த இரசாய தாக்குதலின் போது பீப்பாய் குண்டுகள் எங்கள் விட்டில் விழுந்ததாக அந்த தாக்குதலில் இருந்த தப்பிய 7 வயது சிறுமி கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையால் தடை செய்யப்பட்ட கொடிய ரசாயன ஆயுதங்களை சிரியா அரசு பயன்படுத்தி அங்கிருகும் அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகிறது.
இதில் கடந்த 7-ஆம் திகதி நடந்த இரசாயன தாக்குதலில் 75-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பின்னால் சிரிய ஜனாதிபதி Bashar al-Assad இருப்பதாக கூறி, அமெரிக்கா கூட்டுப் படையுடன் இணைந்து பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் சிரியாவில் இருக்கும் கெமிக்கல் குடோன்களில் தாக்குல் நடத்தின.
சிரியாவில் நடந்த இந்த இரசாயன தாக்குதலில் அவர்கள் பெரும்பாலும் குளோரின் மற்றும் சரின் போனற கொடிய நச்சு வாயுவையே பயன்படுத்தியுள்ளதாக பிரான்சைச் சேர்ந்த புலனாய்வு நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த இரசாயன தாக்குதலில் Masa என்ற 7 வயது சிறுமி சிக்கினார். அதன் பின் அவர் உடனடியாக மருத்துவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டதால், உயிர்பிழைத்தார்.
இதையடுத்து அவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில், எங்கள் வீட்டில் பீப்பாய் குண்டுகள் திடீரென்று வந்து விழுந்தது.
இதனால் பலத்த சத்தம் கேட்டது. அப்போது எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடி படுத்துக் கொண்டோம். அந்த பீப்பாய் குண்டுகள் விழுந்தவுடன், உஷ்.... என்ற மெல்லிய சத்ததுடன் ஒரு வாயு வந்தது.
உடனடியாக வீட்டில் இருந்த அனைவரும் வெளியேறும் படி எங்கள் உறவினர்களில் ஒருவர் கத்தினார், அதன் பின் அந்த வாயு எங்கள் மீது பட்டது இருப்பினும் உடனடியாக முகத்தில் தண்ணீரை தெளித்து விட்டு நாங்கள் மருத்துவர்கள் இருக்கும் பகுதியை நோக்கி ஓடி உயிர் பிழைத்தோம்.
மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பிய போது, நாங்கள் இருந்த இடங்களில் ஏராளமான குழந்தைகள் மற்றும் பலர் இறந்து கிடந்தனர். அந்த நேரத்தில் நான் இரத்த வாடையை முகர்ந்தேன், என்னுடைய டீ சர்ட்டில் குளோரின் வாசனை வந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் சிறுமியின் அம்மா, அன்றிரவு பயங்கர சத்ததுடன் குண்டு வந்து விழுந்தது. இதனால் பூமியில் இருந்த தூசிகள் பறந்தன. வந்து விழுந்த குண்டுகளில் ஒரு குண்டு வெடிக்காமல் இருந்தது, உடனடியாக நாங்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.