இனவெறி தாக்குதல்: விமானத்தில் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

நைஜீரியாவை சேர்ந்த கருப்பின பெண்ணும் அவர் குழந்தைகளும் விமானத்திலிருந்து வலுக்கட்டாயமாக கீழே இறக்கிவிடப்பட்ட நிலையில், குறித்த விமான நிறுவனம் மீது பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தொடர்ந்துள்ளார்.

யுனைடட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஹவுஸ்டனிலிருந்து சான் பிரான்ஸிஸ்கோவுக்கு சென்று கொண்டிருந்தது.

விமானத்தில் நைஜீரியாவை சேர்ந்த ஒபியோமா என்ற பெண் தனது இரு குழந்தைகளுடன் பயணம் செய்துள்ளார்.

அவரருகில் ஆண் பயணி ஒருவர் பயணித்த நிலையில் ஒபியோமா அவரருகில் உட்காருவதை விரும்பாத அவர் இனவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.

அதாவது ஒபியோமா கருப்பாக இருப்பதாக கூறிய அந்த பயணி, அவர் மீது கெட்ட நாற்றம் வருவதாக விமான ஊழியர்களிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து ஒபியோமாவை வலுக்கட்டாயமாக விமானத்திலிருந்து இறக்க முடிவு செய்த ஊழியர்கள், அடுத்து வந்த விமான நிலையத்தில் குழந்தைகளுடன் அவரை இறக்கிவிட்டுள்ளனர்.

இதையடுத்து தன் மீது நடத்தப்பட்ட இனவெறி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஒபியோமா யுனைடட் ஏர்லைன்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் குறித்த விமான நிறுவனம் இது குறித்து விளக்கமளிக்கவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்