பேத்தியை கர்ப்பமாக்க முயன்ற தாத்தா: 4 ஆண்டுகள் சிறை

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
294Shares
294Shares
lankasrimarket.com

ஜிம்பாவே நாட்டில் தனது பேத்தியை ஆபாசமாக புகைப்படம் எடுத்ததோடு மட்டுமல்லாமல் அவரை கர்ப்பமாக்க முயற்சித்த தாத்தாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றத்தில் ஈடுபட்டவரின் பெயர் அவரது பேத்தியின் எதிர்காலம் கருதி வெளியிடப்படவில்லை. ஆனால், இவர் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி ஆவார்.

தனது 14 யது பேத்தியை தவறான முறையில் புகைப்படம் எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

தனது பேத்தியை கர்ப்பமாக்க வேண்டும் என்ற முயற்சித்த இவர், தனது பேத்தியின் தவறான புகைப்படங்களை இணைதயளம் மற்றும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொண்டதன் மூலம் பொலிசில் சிக்கியுள்ளார்.

2016 ஆம் ஆண்டு இவரது வீட்டை சோதனை செய்ததில், 25 பாலியல் காட்சிகள் மற்றும் குழந்தைகளின் ஆபாச படங்கள் இருந்துள்ளன. இதனையடுத்து இவர் கைது செய்யப்பட்டு இவர் மீது குழந்தைகள் பாதுகாப்பு உரிமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவர் மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டதையடுத்து இவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்