சிரியா தாக்குதலுக்குப்பின் கண் விழித்த சிறுவன்: நெஞ்சை பதை பதைக்கச் செய்யும் வீடியோ

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
116Shares
116Shares
lankasrimarket.com

சிரியாவில் தாக்குதலுக்குள்ளான ஒரு சிறுவன் அறுவை சிகிச்சைக்குப் பின் முதன் முதலாக கண் விழிக்க, தன்னால் பார்க்க முடியவில்லை என்பதை அறிந்து கதறியழும் வீடியோ ஒன்று நெஞ்சை பதைபதைக்கச் செய்கிறது.

வடக்கு சிரியாவில் வெடி விபத்து ஒன்றில் சிக்கிய 10 வயது சிறுவனான Abdul Muain முதன்முறையாக கண் விழிக்க, பார்க்க முடியாததால் பயந்து கதறி அழுகிறான். அவனது தந்தை அவனை எவ்வளவோ ஆறுதல் படுத்த முயன்றும் அவரால் முடியவில்லை.

“என் கண்கள், அப்பா, என் கண்கள்” என அவன் கதறி அழுவது மனதைப் பதற வைக்கிறது.

இதில் ஒரே ஆறுதலான செய்தி என்னவென்றால், அவன் துருக்கிக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டு தற்போது பார்வையை மீண்டும் பெற்று வருவதாக செய்திகள் வந்துள்ளதுதான்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்