எதற்காக வட கொரிய தலைவர் கிம் இப்படி செய்தார்? சில ரகசிய தகவல்கள் இதோ

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் இடையே சிங்கப்பூரின் ஷாங்ரி லா ஹொட்டலில் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பில் அணு ஆயுத ஒழிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின் 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

அணு ஆயுதங்களை கைவிடுவோம் என டிரம்பிடம் கிம் உறுதியளித்து உள்ளார். இதற்கு பதிலாக வடகொரியாவுக்கு ஆதரவாக பாதுகாப்பு வழங்கப்படும் என டிரம்ப் உத்தரவாதம் அளித்துள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட கிம் ஜாங் அன் புதன்கிழமை காலை வடகொரியாவின் பியாங்யாங் நகருக்கு வந்தடைந்து உள்ளார் என வடகொரியா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இரு நாட்டு தலைவர்கள் சந்தித்துக்கொண்டாலும், டொனாலட் டிரம்பை விட உலக மக்களால் அதிக கவனிகப்பட்டவர் வட கொரிய அதிபர் கிம் ஜாங்.

ஏனெனில் , கிம் பற்றி உலகால் அறியப்படாத ரகசியங்கள் சில இந்த சந்திப்பின்போது தெரியவந்துள்ளது.

சிங்கப்பூரில் கிம் ஜாங் உன்னுக்கு வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக குண்டு துளைக்காத காரில் பயணம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவர் யாரிடமும் பேச வேண்டும், எந்த அறையில் தங்க வேண்டும் என்பன முன்பே துல்லியமாக திட்டமிடப்பட்டது.

2 விமானங்கள், கப்பலில் கிம் ஜாங் உன்னுக்காக உணவுகள் மற்றும் உடைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. தனது உடல்நிலையை யாரும் அறிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக பிரத்யேகமான கழிவறையை சிங்கப்பூருக்கு எடுத்து சென்றுள்ளார்.

டொனால்ட் டிரம்பை விட, வட கொரிய தலைவர் கிம் தனது பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்