விழுந்து நொறுங்கிய விமானம்: உயிருக்கு போராடும் பயணிகள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
1359Shares
1359Shares
lankasrimarket.com

தென் ஆப்பிரிக்காவின் Pretoria பகுதியில் பயணிகள் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Pretoria பகுதியில் அமைந்துள்ள Wonderboom விமான நிலையத்தின் அருகாமையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 20 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஒருவரின் நிலை கவலைக்கிடம் எனவும் கூறப்படுகிறது.

மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

விபத்து நடந்த பகுதியில் விமானத்தின் முக்கிய பாகங்கள் சிதறிக் கிடந்ததாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்