மருமகளின் தவறை கண்டுப்பிடித்த மாமியார்: நடுரோட்டில் செய்த அதிர்ச்சி செயல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
336Shares
336Shares
lankasrimarket.com

துருக்கியில் மருமகளின் கள்ளக்காதலனை மாமியார் சாலையில் வைத்து நிர்வாணமாக அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொச்சாலி மாகாணத்தில் தான் இச்சம்பவம் திங்களன்று நடந்துள்ளது.

அங்குள்ள ஓரு வீட்டில் மருமகளும், மாமியாரும் இருந்த போது மருமகளின் கள்ளக்காதலன் வீட்டுக்கு வந்துள்ளார்.

இதை பார்த்து கோபமடைந்த மாமியார் மருமகளை ஒரு அறையில் வைத்து பூட்டி வைத்துவிட்டு, அந்த நபரை நிர்வாணமாக்கி அடித்தார்.

பின்னர் நபர் வீட்டிலிருந்து தப்பித்து சாலைக்கு வந்த நிலையில் அவரை விடாமல் துரத்திய மாமியார் சாலையிலேயே வைத்து அடித்து உதைத்தார்.

இதை பார்த்து அங்கு மக்கள் கூடிய நிலையில் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அடிவாங்கிய நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்