தாய்லாந்து குகையில் ஹீரோவாக செயல்பட்ட மருத்துவருக்கு நேர்ந்த சோகம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
894Shares
894Shares
lankasrimarket.com

கடந்த 17 நாட்களாக தாய்லாந்திலுள்ள குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்கள், அவர்களது பயிற்சியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தாய்லாந்து குகையில் சிக்குண்டிருந்த 12 சிறார்களும், அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும் மீட்கப்பட்ட பின்னர், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

குகைக்குள் சிக்கியர்வகளை மீட்பதற்காக, திறமை வாய்ந்த 12 வீரர்கள் மற்றும் அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு மருத்துவர் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர் ரிச்சர்ட் ஹாரிஸ் சிறந்த நீச்சலில் சிறந்தவர். இவர்தான், உடல்ரீதியாக யார் பலவீனமாக இருக்கிறார்களோ, அவர்களை முதலில் வெளியே அனுப்பலாம் என சோதித்து அவர்களை வெளியே அனுப்பினார்.

அனைவரும் மீட்கப்பட்ட பின் கடைசியாக குகைக்குள் இருந்து வெளியே வந்தார் மருத்துவர். சிறுவர்களை மீட்ட சந்தோஷத்தை தாய்லாந்து மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஆனால், ஹீரோவாக செயல்பட்டு குகையில் இருந்தது வெளியே வந்த மருத்துவருக்கு சோகம் ஏற்பட்டுள்ளது. அவர் தந்தை ஜிம் ஹாரிஸ் இறந்துவிட்டார். இதையடுத்து உடனடியாக அவுஸ்திரேலியா திரும்பியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்