உலகக்கோப்பை கால்பந்து போட்டியை ரஷ்ய அதிபர் புடின் பார்க்காததற்கு காரணம் என்ன?

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
97Shares
97Shares
lankasrimarket.com

ரஷ்யாவில் கோலகலமாக நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தை ரஷ்ய அதிபர் புடின் நேரில் கண்டுகளிப்பார் என கூறப்படுகிறது.

முதல் அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதியதில், பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது.

இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து, க்ரோஷியா அணிகள் மோத உள்ளன. அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் வரும் 15 ஆம் தேதி மாஸ்கோவில் நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடும்.

இந்நிலையில், தொடரின் முதல் போட்டியை நேரில் கண்டுகளித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இறுதிப் போட்டியையுப் பார்ப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7 ஆம் தேதி குரோஷியாவுக்கு எதிராக நடந்த காலிறுதிப் போட்டியில் ரஷ்யா, தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா விளையாடிய போட்டிகளில் புதின் நேரில் கலந்து கொள்ளாததால் அவர், நம் அணிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை. அவருக்கு நேரம் கிடைக்காததே காரணம்.

நேரில் வந்து போட்டிகளை பார்க்க முடியாத போதும் அதிபர், தொடர்ந்து அணியின் பயிற்சியாளரிடம் நடக்கும் சம்பவங்கள் குறித்து தொடர்ந்து பேசி வந்தார்.

இந்நிலையில், அவர் இறுதிப் போட்டியை கண்டிப்பாக பார்க்க வருவார் என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்