கால்பந்து போட்டியில் பந்தயம் கட்டி தோற்றதால் ரசிகர் செய்த விபரீத செயல்: பதறவைக்கும் வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
179Shares
179Shares
lankasrimarket.com

ரஷ்யாவை சேர்ந்த கால்பந்து ரசிகர் ஒருவர் தங்கள் அணி அரையிறுதிக்கு தகுதிபெறும் என பந்தயம் கட்டி தோற்ற நிலையில் லொறி முன்னால் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகக்கிண்ண கால்பந்து திருவிழா தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வரும் நிலையில் ரஷ்ய கால்பந்தாட்ட அணி அரையிறுதிக்குள் நுழையவில்லை.

இந்நிலையில் ரஷ்யாவின் ரசிகர் ஒருவர் தங்கள் அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறும் என நண்பரிடம் பந்தயம் கட்டியுள்ளார்.

ஆனால் ரஷ்யா அரையிறுதிக்கு முன்னேறாததால் அவர் பந்தயத்தில் தோற்றார்.

இதையடுத்து நடுரோட்டுக்கு நண்பருடன் வந்த குறித்த நபர் சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு லொறிகள் அடியில் படுத்து கொண்டார்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக லொறியில் அவர் அடிப்படவில்லை.

இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் வீடியோவானது போலி என அதை பார்த்த பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

மார்பிங் முறையில் லொறி ஓடுவதை முதலில் தயார் செய்து பின்னர் இளைஞர் அதன் முன்னால் விழுவது போல வீடியோ தயார் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

வீடியோவை காண

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்