உலகக்கோப்பை கால்பந்து போட்டியால் மனைவியை விவாகரத்து செய்த கணவன்: அதிரவைக்கும் காரணம்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
132Shares
132Shares
lankasrimarket.com

திருமணமாகி 14 ஆண்டுகள் உடன் வாழ்ந்த மனைவியை உலகக்கோப்பை கால்பந்து போட்டி குறித்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவர் விவாகரத்து செய்துள்ளார்.

2002ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியின்போது சந்தித்துக் கொண்ட ரஷ்யாவைச் சேர்ந்த Arsen (40) மற்றும் Lyudmila (37) கால்பந்தாட்டம் மீது கொண்ட காதலால் காதலாகி இரண்டாண்டுகளுக்குப்பின் மணம் புரிந்து கொண்டனர்.

தற்போது கால்பந்தாட்டமே அவர்களது திருமண வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Arsen அர்ஜெண்டினா வீரர் Messiயின் பரம ரசிகர், அதே நேரத்தில் Lyudmila, Cristiano Ronaldoவின் தீவிர ரசிகை.

தன் மனைவி எப்போதும் Messi மற்றும் Ronaldo குறித்து ஜோக்கடிப்பது வழக்கம் என்று கூறும் Arsen இந்த போட்டியில் அர்ஜெண்டினாவின் ஏமாற்றமளிக்கும் தோல்வியால் தனது விருப்ப வீரரின் விளையாட்டு குறித்து அவர் கிண்டல் செய்ததாக கூறியிருக்கிறார்.

அப்போது அதை கண்டுகொள்ளாவிட்டாலும், பின்னர் நைஜீரியாவுக்கு எதிராக Messi கோல் அடிக்கும்போது அதை Arsen கொண்டாட, அப்போதும் அவர் மனைவி Messiயை கேலி செய்ய அவருக்கு பொறுக்க முடியாத கோபம் ஏற்பட்டிருக்கிறது.

அவருடைய பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார் Arsen. மறுநாள் Arsen நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார்.

இதற்கிடையில் அர்ஜெண்டினாவும் போர்ச்சுகலும் 16 ஆவது சுற்றில் 2018 உலகக்கோப்பை போட்டியிலிருந்து வெளியேறிவிட்டன என்பது சோகமான ஒரு விடயம்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்