சல்மான் கான், சச்சினுடன் இணைந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்
சல்மான் கான், சச்சினுடன் இணைந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்
0Shares
0Shares
lankasrimarket.com

ஒலிம்பிக் போட்டிகளுக்கான இந்தியாவின் நல்லெண்ணத் தூதராக ஓஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

31-வது ஒலிம்பிக் போட்டிகள் தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் வரும் ஆகஸ்ட் 5-ஆம் திகதி தொடங்கி ஆகஸ்ட் 21-ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

முன்னதாக ஒலிம்பிக்போட்டிகளுக்கான இந்தியாவின் நல்லெண்ண தூதராக பாலிவுட் நடிகர் சல்மான் கான், துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா, இந்தியா கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானையும் நல்லெண்ண தூதரக இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்துள்ளது.

இதன் மூலம் சச்சின் இடம்பெற்றுள்ள இந்தியாவின் நல்லெண்ண தூதர் குழுவில் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து செயல்படவுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments