உபர் கிண்ண பாட்மின்டன்: வெண்கலத்துடன் வெளியேறியது இந்திய அணி

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்
உபர் கிண்ண பாட்மின்டன்: வெண்கலத்துடன் வெளியேறியது இந்திய அணி
0Shares
0Shares
lankasrimarket.com

உபர் கிண்ண பாட்மிண்டன் தொடர் அரையிறுதி சுற்றில் ஜப்பானிடம் 3-0 என்ற வெற்றி கணக்கில் தோல்வியடைந்து வெண்கலப்பதகத்துடன் வெளியேறியது இந்திய மகளிர் அணி.

உபர் கிண்ண பாட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. மகளிருக்கான போட்டியில் இந்திய அணி, அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொண்டது.

இரு அணிகளுக்கும் இடையே நடந்த முதல் போட்டியில், சீனா வீராங்கனை Li Xuerui-யிடம் (21-15, 21-12, 21-17) என்ற செட்டில் இந்தியாவின் நட்சத்திர வீரராங்கனை சாய்னா நெஹ்வால் தோல்வி கண்டார்.

இரண்டாவது போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 13-21, 21-23 என்ற என்ற நேர்செட்டில் சீனா வீராங்கனை Wang Shigxan-யிடம் தோல்வி கண்டார்.

மூன்றாவது போட்டியில் நடந்த இரட்டையர் ஆட்டத்தில், இந்தியாவின் Jwala Gutta/ Sikki Reddy ஜோடி (6-21,6-21) எனற் நேர்செட்டில் சீனாவின் Tiang/Zhao ஜோடியிடம் தோல்விகண்டது.

தொடர் தோல்விகளால் அரையிறுதி சுற்றில் இந்திய அணி 0-3 என்ற வெற்றி கணக்கில் ஜப்பானிடம் தோல்வியடைந்து.

முன்னதாக, காலிறுதி வெற்றியின் மூலம் இந்திய அணி வெண்கலப்பதகத்தை உறுதி செய்த நிலையில், தற்போது அரையிறுதி சுற்றில் தோல்வியடைந்தது மூலம் வெண்கலப்பதக்கத்துடன் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது இந்திய அணி.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments