எனது வாழ்க்கையில் இது கடினமான தருணம்: மின்னல் வீரர் போல்ட்

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

சக நாட்டு வீரர் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதையதால் உலகின் மின்னல் வீரர் உசைன் போல்ட் பீஜிங் தங்கத்தை ஒலிம்பிக் சங்கத்திடம் திருப்பிக்கொடுத்துள்ளார்.

கடந்த 2008-ல் சீனாவின் பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் 4X100 மீற்றர் ரிலேவில் ஜமைக்கா அணி தங்கம் வென்றது. இதில் ஜமைக்கா வீரர்களில் ஒருவரான கார்டர் சமீபத்தில் நடந்த ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்தார்.

இதனால் ஜமைக்கா அணியின் வெற்றி பறிபோனது. இதையடுத்து அந்த வெற்றி பதக்கத்தை திருப்பியளிக்க வேண்டும் என ஒலிம்பிக் கமிட்டி உத்தரவிட்டது.

இதனால் உசைன் போல்ட் தனது பதக்கத்தை திருப்பி அளித்தார்.

தற்போது போல்ட் வசம் 8 தங்க பதக்கமே உள்ளது. பதக்கத்தை திருப்பியளித்தது குறித்து உசைன் போல்ட் கூறுகையில், ''தங்க பதக்கங்களில் ஒன்றை திருப்பி அளித்தது கஷ்டமானதாக இருந்தது. இருப்பினும் ஒலிம்பிக் கமிட்டியின் முடிவை மதிப்பது கடமை என்பதால், பதக்கத்தை திருப்பி கொடுத்துவிட்டேன்.'' என்றார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments