சிறப்பாக நடைபெற்ற ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி

Report Print Ramya in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று இடம்பெற்றது.

ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் அதிபர் எம் .சந்திரலேகா தலைமையில் இல்ல விளையாட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது.

பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.ராதாகிருஷ்ணன் கலந்துக் கொண்டார்.

மேலும்,குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர், உதவி ஆசிரியர்களின் கொடுப்பணவு பத்தாயிரமாக அதிரிக்கப்படும் என்றும் கணிதம், விஞ்ஞான ரீதியாக பாடசாலைகள் தரமுயர்த்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் 38 வது பிறந்தநாள் நினைவு கூரப்பட்டது.

ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியில்,1ம் இடத்தை கடமை இல்லம் பெற்றுக் கொண்டதுடன் 2ம் இடத்தை கட்டுப்பாடு இல்லம் பெற்றுக்கொண்டதுடன், 3ம் இடத்தை கண்ணியம் இல்லம் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கல்விக்கான தேசிய ஆலோசகர் சு.முரளிதரன், ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதி ரமணி அபேநாயக்க, விரிவுரையாளர்கள்,பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments