டோனி ஒன்றும் சிறந்த வீரர் கிடையாது: சவுரவ் கங்குலி சுளீர் பேட்டி

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

மகேந்திர சிங் டோனி டி20 போட்டிகளில் அவ்வளவு சிறந்த வீரர் கிடையாது என சவுரவ் கங்குலி விமர்சனம் செய்துள்ளார்.

ஐ.பி.எல் போட்டியின் தற்போதைய சீசனில் இந்திய அணி வீரர் டோனி புனே அணியில் விளையாடி வருகிறார்.

ஓட்டங்கள் குவிக்க திணறி வரும் அவரின் பேட்டிங் பற்றி பலர் விமர்சித்து வருகிறார்கள்.

புனே அணியின் உரிமையாளர் கூட டோனியை மறைமுகமாக சாடியிருந்தார்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி அளித்துள்ள பேட்டியில் டி20 கிரிக்கெட்டில் டோனி சிறந்த வீரர் என கூற முடியாது.

இந்த வகையான போட்டிகளில் அவர் கடந்த 10 வருடங்களில் ஒரே ஒரு அரை சதம் மட்டுமே அடித்துள்ளார்.

இது சிறந்த சாதனையில்லை என கங்குலி கூறியுள்ளார். சமீபத்தில் புனே அணி தலைவர் பொறுப்பிலிருந்து டோனி நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments