ஐபிஎல் தொடரில் மோதிக்கொண்ட ரசிகர்கள்..கலவர பூமியான மைதானம்: வைரலாகும் வீடியோ

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதிய ஆட்டத்தின் போது, ரசிகர்கள் மோதிக்கொண்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான தொடர் இந்தாண்டும் நடைபெற்று வருகிறது.

தற்போது வரை நான்கு அணிகள் 6 போட்டிகளில் விளையாடியுள்ளது. மீதம் உள்ள அணிகள் 5 போட்டிகள் விளையாடியுள்ளன.

இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதின. அப்போட்டியின் இடையில் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் மோதிக்கொண்டனர்.

இதனால் மைதானமே கலவர பூமியானது, அதன் பின்னர் அங்கிருந்த பொலிசார் அவர்களை கட்டுப்படுத்தினர்.

தற்போது ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்கள் ஒருவரை ஒருவர் மோதிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments