ஐபிஎல் கிரிக்கெட் சியர்லீடர்ஸ் சம்பளத்தை கேட்டா ஆடிபோய்டுவீங்க

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் நடனமாடும் சியர்லீடர்ஸ் பெண்கள் ஒவ்வொரு போட்டிகளிலும் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சியர்கர்ல்ஸாக நடனம் ஆடுபவர்களுக்கு ஒரு போட்டிக்கு இந்திய ரூபாய் மதிப்பின் படி 18,000 முதல் 30,000 வரை சம்பளமாக வழங்கப்படுகின்றது. இதுவே அவர்கள் நடனம் ஆடும் அணி வெற்றி பெற்றால் போனஸ் தொகையும் உண்டு.

ஐபிஎல் சீசன் 10 இப்போது நடந்து வரும் நிலையில் குறைந்த பட்சம் ஒவ்வொரு அணிகளும் 14 போட்டிகளில் விளையாடுகின்றனர்.

அப்படியானால் 14 போட்டிக்கு இந்தச் சியர்கர்ல்ஸ் 4 லட்சம் வரை சம்பளமாகப் பெறுவார்கள். இதுவே கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் ஆகியவற்றுக்கு அணிகள் செல்லும் போது கூடுதலாகப் பணத்தை அள்ளுவார்கள்.

மட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளில் பங்கு பெறும் அணிகளுடன் நடத்தப்படும் போட்டோ ஷூட்டில் பங்கு பெற்றால் 5,000 முதல் 10,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுமாம்.

கொல்கத்தா க்நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா க்நைட் ரைடர்ஸ் அணிக்காக நடனம் ஆடுபவர்கள் சம்பளமாக 15,000 ரூபாயும், போனஸ் 4,000 ரூபாயும், கூடுதலாக நடனம் ஆட 12,000 ரூபாயும் சம்பளமாகப் பெறுகின்றனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பெங்களூரு அணி சியர்கர்ல்ஸ் சம்பளமாக 12,000 ரூபாயும், போனஸ் 4,000 ரூபாயும், பார்டி அல்லது நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் போது 12,000 ரூபாயும் பெறுகின்றனர்.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் பிற அணிகள்

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நடனமாடுபவர்களுக்கு ரூ.8,000 முதல் 10,000 வரையிலும், போனஸ் 4,000 ரூபாயும் பெறுகின்றனர்.

இந்தச் சம்பளங்கள் லீக், கால் இறுதி, அரை இறுதி, இறுதி போட்டிகளைப் பொறுத்து மாறுபடும்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments