மனிதாபிமானத்தால் மக்கள் மனதை வென்ற வீராட் கோஹ்லி

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
Cineulagam.com

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் வீராட் கோஹ்லி தனக்கு விருப்பமான தன்னுடைய கிரிக்கெட் பேட்டை கிறிஸ் கெய்லின் தொண்டு நிறுவனத்துக்கு பரிசளித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் வீராட் கோஹ்லியும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர் கிறிஸ் கெய்லும் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார்கள்.

கிறிஸ் கெய்ல் வறுமையில் வாடும் ஏழை மக்களுக்கு உதவி செய்யும் நோக்கில் Chris Gayle’s foundation என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் வீராட் கோஹ்லி தான் உபயோகப்படுத்தும் கிரிக்கெட் பேட்டை அந்த தொண்டு நிறுவனத்துக்கு பரிசளித்துள்ளார்.

கோஹ்லி பரிசளித்த பேட் வரும் ஜூன் 6ஆம் திகதி லண்டனில் Gayle’s foundation சார்பாக நடக்கும் நிகழ்ச்சியில் ஏலத்தில் விடப்படுகிறது.

அந்த பேட்டில், வீராட் கோஹ்லி தனது கையெழுத்தை போட்டுள்ளார். மேலும், தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த பேட் இது மற்றும் இதில் விளையாடுவதை நேசிப்பேன் என எழுதியுள்ளார்.

அதே நேரத்தில் இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் தொடங்குவதால், கோஹ்லியின் பேட் நல்ல விலைக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏலத்தில் கிடைக்கும் பணம் கெய்லின் தொண்டு நிறுவனத்துக்கு போய் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments