அந்த நாள்! அனுஷ்கா பற்றி மனம் திறந்த கோஹ்லி

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் வீராட் கோஹ்லி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வருகிறார் என்பது ஊரறிந்த விடயம்.

வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் கூட தன் காதலரை உற்சாகப்படுத்துவதற்காக சென்று விடுவார்.

போட்டிகள் இல்லாத வேளை இருவரும் ஊர் சுற்றும் புகைப்படங்களும் வெளியாகும்.

திருமணத்திற்கு கோஹ்லி சம்மதம் சொன்னாலும், அனுஷ்கா தான் இழுத்தடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்தாண்டு நடந்த சம்பவத்தை பற்றி நினைவு கூர்ந்துள்ளார் கோஹ்லி.

அவர் கூறுகையில், கடந்த 2016ம் ஆண்டு இங்கிலாந்தின் மொகாலியில் கிரிக்கெட் போட்டி நடந்தது.

அனுஷ்கா சர்மாவும் வந்திருந்தார்கள், ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தேன்.

திடீரென கிரிக்கெட் வாரியத்திலிருந்து அழைப்பு வந்தது, நீங்கள் தான் ஒருநாள் போட்டிக்கும் தலைவர் என்று கூறினார்கள்.

சந்தோஷத்தில் என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை, அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை, அனுஷ்காகிட்ட சொன்னேன்.

அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது, அனுஷ்கா ரொம்பவே ஸ்பெஷல் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments