பல கோடிக்கு விலை போன விராட் கோஹ்லியின் ஓவியம்: அப்படியென்ன சிறப்பு?

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லியின் பத்து வருட ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பயணத்தை குறிக்கும் ஓவியம் ரூ.23.7 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளது

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தனது பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

advertisement

இந்நிறுவனம் சார்பில் நேற்று விருந்து நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில், Sasha Jaffre என்ற பிரபல ஓவியர் கோஹ்லியின் 10 வருட ஐபிஎல் பயணம் குறித்து வரைந்திருந்த ஓவியம் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்த ஓவியத்தை பிரித்தானியாவில் தொழில் செய்து வரும் இந்தியரான பூனம் குப்தா ரூ.23.7 கோடிக்கு வாங்கியுள்ளார்.

ஓவியர் Sasha, டேவிட் பெக்கம், டோனி, யுவராஜ் சிங் போன்ற விளையாட்டு வீரர்கள் செய்யும் தொண்டு பணிகளுக்கு அவர்களுடன் இணைந்து செயல்படுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

ஓவியத்தை வாங்கிய பூனம் குப்தா கூறுகையில், இளம் இந்திய வீரர்களிடம் எனக்கு பிடித்த விடயம் என்னவென்றால் மைதானத்துக்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி பொறுப்புடன் பல மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள் என கூறியுள்ளார்.

மேலும், அடிமைத்தனம் இவ்வுலகில் இருக்கக்கூடாது, அதை எதிர்த்து நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும்.

இந்த தீமைக்கு எதிராக கோஹ்லி நிற்கும் போது, அதற்கு உதவ எனக்கு மிகவும் பிடித்த ஓவியரான Sashaவின் ஓவியத்தை வாங்கி வீட்டுக்கு எடுத்து செல்லவுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.


மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments