கிண்டலுக்கு ஆளான பாகிஸ்தான் அணித்தலைவர்: ஆதரவளித்த இந்திய ரசிகர்கள்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
Cineulagam.com

சாம்பியன்ஸ் டிராபி நடப்பு தொடரில் இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

போட்டி முடிந்த பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், பாகிஸ்தான் அணித்தலைவர் சர்ப்ராஸ் அகமது தட்டுதடுமாறி ஆங்கிலத்தில் பதிலளித்தார்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதுடன், பாகிஸ்தான் வீரர்கள் அனைவருமே அரைகுறை ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள் என இந்திய இணையதளமொன்று கிண்டல் செய்தது.

இந்த கிண்டலுக்கு தற்போது இந்திய ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

ஸ்ரீதம் மிஸ்ரா என்ற ரசிகர் கூறுகையில், நான் இந்தியன் தான், ஆனால் ஒரு வீரரை கிண்டலடிப்பதை ஏற்க முடியாது.

அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்றால் என்ன? தனது அணியை இறுதிப் போட்டிக்கு அவர் அழைத்து சென்றதை தான் நாம் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

இப்படி பல இந்திய ரசிகர்கள் சர்ப்ராஸ்க்கு ஆதரவாக குரல் கொடுக்க பாகிஸ்தான் ரசிகர்கள் இதை வரவேற்றுள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments