காதலியின் முத்தத்தால் தடை பெற்ற ஒலிம்பிக் சாம்பியன்

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

காதலி கொடுத்த முத்தம் காரணமாக அமெரிக்காவின் ஒலிம்பிக் சாம்பியன் கில் ராபர்ட்ஸ் தடைக்கு தள்ளப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீரர் கில் ராபர்ட்ஸ் (28) கடந்த வருடம் பிரேசில் நாட்டின் ரியோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் 4X400 தொடர் ஓட்டத்தில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்திருந்தார்.

கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி ஊக்கமருந்து பயன்படுத்தியுள்ளரா என்பதை பரிசோதனை செய்வதற்காக மாதிரி எடுக்கப்பட்டது.

அவரிடம் எடுக்கப்பட்ட மாதிரியை பரிசோதனை செய்யப்பட்டதில், தடை செய்யப்பட்ட மருந்தான புரொபெனெசிட்-ஐ பயன்படுத்தியது தெரியவந்தது. இதனால் கடந்த மே மாதம் 5 ஆம் திகதியில் இருந்து கில் ராபர்ட்ஸ் போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டது.

இதற்கிடையே இவருடைய வழக்கு அமெரிக்காவின் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது, அவர் வேண்டுமென்றே பயன்படுத்தவில்லை என்று தடையை நீக்கியுள்ளது.

இருப்பினும் அமெரிக்காவின் ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சி, அவரது உடலில் புரோபெனெசிட் எப்படி வந்தது என்பதை விவரித்துள்ளது.

புரோபெனெசிட் மருந்து இரத்தத்தில் யூரிக் ஆசிட் அதிகம் இருந்தால் பயன்படுத்தக்கூடியது. இரத்தத்தில் இருந்து சிறுநீரை அதிக அளவில் பிரித்து வெளியேற்ற பயன்படும். ராபர்ட்ஸின் மாதிரியில் இந்த மருந்து கலந்திருந்தது தெரியவந்துள்ளது.

பரிசோதனை மாதிரி எடுக்கும் அன்று ராபர்ட்ஸ் தனது காதலி அலெக்ஸ் சலாசருக்கு முத்தம் கொடுத்துள்ளார். அவர்கள் சந்திக்கும்போதெல்லாம் ராபர்ட்ஸ், தனது காதலிக்கு தொடர்ந்து முத்தம் கொடுத்துள்ளார்.

சலாசர் சைனஸ் பிரச்னை காரணமாக குறித்த மருந்தை பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் அவரது உடலில் அந்த மருந்து இவரிடம் சேர்ந்துள்ளது என்று அமெரிக்க தீர்ப்பாய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனது காதலி மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தது எனக்குத் தெரியாது. முத்தம் கொடுத்தால் தடை வரை செல்லும் என்பது குறித்து நான் அறிந்திருக்கவில்லை என்று ராபர்ட்ஸ் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments