15 வருடங்களுக்கு பின்னர் கங்குலி

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் கங்குலிக்கு மேற்கு வங்க மாநிலம் பலூர்காட்டில் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.

எட்டு அடி உயரம் கொண்டது இந்தசிலை. 2003-ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட் சதம் அடித்தபோது கங்குலி பேட்டை உயர்த்தியபடி வந்தார். அதை உணர்த்தும் விதமாக சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது, இதில் கலந்துகொள்ளவதற்காக கங்குலி பலூர்காட் பகுதிக்கு ரயிலில் பயணம் செய்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், இந்த சிலை திறப்பால் எனது மனம் மிகவும் மகிழ்ச்சியடைகிறது, கடைசியாக 2001-ல் ரயிலில் பயணம் செய்தேன். 15 வருடத்துக்கு பிறகு இன்று மீண்டும் ரயிலில் பயணம் செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments