ஜாகீர்கானுடன் திருமணம் எப்போது?

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கானுடன் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடக்கும் என அவரது காதலியும் நடிகையுமான சகாரிகா காட்கே தெரிவித்துள்ளார்

இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக ஜாகீர்கான் டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடக்கும் என்றும், திகதி இன்னும் முடிவாகவில்லை எனவும் தெரிவித்துள்ளார் சகாரிகா காட்கே.

மேலும் அவர் கூறுகையில், ஜாகீர்கான் என் மரியாதைக்குரிய நபர், ஊர் சுற்றுவது எனக்கு பிடிக்கும், அவருக்கும் பிடிக்கும், கிரிக்கெட்டுக்காகவே வெளிநாடுகளுக்கு செல்வார்.

திருமணத்திற்கு பின்னரும் நல்ல கதைகள் என்றால் நிச்சயம் நடிப்பேன், இதை ஜாகீர்கானும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்