இலங்கை கிரிக்கட் அணியின் உத்தியோகபூர்வ ஆடையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஜனாதிபதி

Report Print Ajith Ajith in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasri.com

ஓசோன் நட்பு தேயிலை இலட்சினை இலங்கை கிரிக்கட் அணியின் உத்தியோகபூர்வ ஆடையில் உள்வாங்கப்படவுள்ளது.

ஓசோன் படைக்கு தாக்கம் செலுத்துகின்ற ஒருவகை இரசாயன பதார்த்தத்தை இந்நாட்டு தேயிலையில் சேர்ப்பதனை முழுவதுமாக கட்டுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

குறித்த நடவடிக்கைகளுக்கு சர்வதேசத்தின் பாராட்டுதல்களும் கிடைத்தன. வெற்றியினை நினைவுபடுத்தும் வகையில் இலங்கை தேயிலை சபையின் மூலம் ஓசோன் நட்பு தேயிலை இலட்சினை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தேயிலையினை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை கிரிக்கட் அணியினரின் உத்தியோகபூர்வ ஆடையில் அந்த இலட்சினையினை உட்படுத்துவது தொடர்பில் உரிய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படவுள்ளது.

இது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்