தெற்காசியாவில் மூன்றுமுறை தொடர்ச்சியாக தங்கப்பதக்கம் பெற்ற இலங்கைத் தமிழர்

Report Print V.T.Sahadevarajah in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

தெற்காசிய விளையாட்டுப்போட்டியின் கராத்தே சுற்றுப்போட்டியில் இலங்கை வீரர் சௌந்தரராஜா பாலுராஜ் தொடர்ச்சியாக மூன்றுமுறை (HATRICK) முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை பெற்றுச்சாதனை படைத்துள்ளார்.

இவர் கிழக்கிலங்கையின் கல்முனை தமிழ்ப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சேனைக்குடியிருப்புக் கிராமத்தைச் சேர்ந்தவர்.

advertisement

2014ஆம் 2016ஆம் ஆண்டுகளில் இந்தியா - புதுடில்லியில் இடம்பெற்ற கராத்தே சுற்றுப்போட்டியின் சிரேஸ்ட பிரிவு கராத்தே போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தைப் பெற்றுச் சாதனை படைத்தார்.

இறுதியாக இந்த மாதம் 05ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற தெற்காசிய கராத்தே சுற்றுப்போட்டியில் முதலிடம்பெற்று மூன்றாவது தடவையாகவும் (HATRICK) தங்கப்பதக்கம் பெற்ற ஒரேயொரு இலங்கைவீரர் என்ற பதிவொன்றையும் (RECORD) ஏற்படுத்தியுள்ளார்.

இவரது பயிற்றுவிப்பாளர் சென்சே பொறியியலாளர் எஸ்.முருகேந்திரன். இவர் வடக்கு, கிழக்கிலிருந்து ஆசிய கராத்தே போட்டிகளுக்கு மத்தியஸ்தராகத் தெரிவான முதல் வீரராவார். இவர் சர்வதேச 5ஆவது டான் கறுப்புப்பட்டி வீரராவார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்