மேடையிலேயே கழுத்து உடைந்து மரணமடைந்த வீரர்

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

தென்னாப்பிரிக்காவில் பாடிபில்டர் சாம்பியன் போட்டியின்போது பார்வையாளர்களை மகிழ்விக்க குட்டிக்கரணம் அடித்த வீரர் ஒருவர் கழுத்து உடைந்து சம்பவயிடத்திலேயே மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் பாடிபில்டர் சாம்பியன் போட்டிகளில் பலமுறை வெற்றிபெற்றவர் Sifiso Lungelo Thabete. சம்பவத்தன்று இவர் அங்குள்ள பிரபல நிறுவனத்தால் நடத்தப்படும் சாம்பியன் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

போட்டி துவங்குவதற்கு முன்னர் எஞ்சிய போட்டியாளர்களுடன் இவரும் ஆயத்த வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அப்போது பார்வையாளர்கள் பலத்த ஆரவாரமிட்டு போட்டியாளர்களை ஊக்குவித்து வந்துள்ளனர்.

இதில் கவரப்பட்ட Sifiso Lungelo Thabete, பார்வையாளர்களை மகிழ்விக்கும் பொருட்டு குட்டிக்கரணம் அடித்துள்ளார்.

இதில் backflip அடித்தபோது அவரது கட்டுப்பட்டை இழந்து தலை தரையில் மோதியுள்ளது.

இதில் கழுத்து உடைந்து எந்த ஒரு சலனமும் இன்றி சனிக்கிழமை முழுவதும் சிகிச்சையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி Sifiso Lungelo Thabete உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. குறித்த சம்பவம் தென் ஆப்பிரிக்கா பாடிபில்டர் குழுவினரையே மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்