சச்சினுக்கு ஸ்பெஷல் புகைப்படம்: பதிவேற்றம் செய்த பிரட் லீ

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரட் லீ சச்சினின் ரசிகர் ஒருவர் சச்சினின் உருவத்தை பச்சைக் குத்திக் கொண்டது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டிராகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ தனது இன்ஸ்டிராகிராமில் புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.

அதில் ரசிகர் ஒருவர் சச்சின் உருவத்தை தனது வலது மார்பகத்தில் பச்சை குத்தியுள்ளார். இதை சச்சினுக்கு டெக் செய்துள்ள லீ, இவர் உங்களின் மிகப் பெரிய தீவிர ரசிகராக இருப்பார் என்று நினைக்கிறேன், இதை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது, இது உங்களுக்கான ஸ்பெஷல் புகைப்படம் என்று கூறியுள்ளார்.

தற்போது பிரட் லீ இந்தியாவில் நடக்கும் கர்நாடக பிரிமியர் லீக் தொடரில் வர்ணனையாளராக உள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்