தேசிய ஹொக்கி அணியில் விளையாட தெரிவாகியுள்ள முதல் தமிழ் இளைஞன்

Report Print Gokulan Gokulan in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிஸ் நாட்டின் சுவிஸ் தேசிய Inline Hockey U19 அணியில் விளையாட தெரிவாகியுள்ள முதல் தமிழ் இளைஞனாக அஷ்வின் சிவசுப்ரமணியம் தெரிவாகியுள்ளார்.

அஷ்வின் சிவசுப்ரமணியம் தனது 15வது வயதில் சுவிஸ் நாட்டின் Inline Hockey U19 தேசிய அணியில் பந்து காப்பாளராக விளையாட இவர் தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றார்.

இவர் தனது சிறுவயது முதல் சுவிஸ் நாட்டின் முன்னணி Ice Hockey கழங்கங்களான EHC Bienne, HC AJOIE, HC Delemont SHC Rossemaison ஆகிய கழங்களுக்கு பந்துகாப்பாளராக விளையாடி வருகின்றார்.

2013 ஆண்டு ஜேர்மனியில் 2015 ஆண்டு கனடாவில் 201 7 ஆண்டு சுவிஸ் நாட்டில் நடைபெற்ற உலக ஐரோப்பிய சுவிஸ் சாம்பியன் கிண்ணத்துக்கான போட்டிகளில் சுவிஸ் அணி பந்து காப்பாளராக விருதை பெற்றுள்ளார்.

இன்னும் பல விருதுகளை தன் வசம் கொண்டு சுவிஸ் நாட்டின் Hockey இளம் முன்னணி விளையாட்டு வீரரகள் வரிசையில் இவர் திகழ்கின்றார்.

அஷ்வின் சிவசுப்ரமணியம் தனது 15வது வயதில் U19 சுவிஸ் அணியின் பந்து காப்பாளராக விளையாடுவது நம் தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விடயமாகும்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்