ஆசிய போட்டிகளுக்கு தெரிவாகியுள்ள 84 வயது முதியவர்

Report Print Gokulan Gokulan in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

சீனாவில் நடைபெறும் 20வது ஆசியா மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஸ் போட்டிக்காக தயாராகி வருகிறார் 84 வயதான Shi Yide.

சீனாவின் Liuzhou City Stadium-ல் வருகிற 26ம் திகதி ஆசியா மாஸ்டர்ஸ் தடகள சாம்பின்ஸ் போட்டிகள் நடைபெறவுள்ளது.

advertisement

இப்போட்டிகளில் 20 நாடுகளை சேர்ந்த 1900 பேர் பங்கேற்கவுள்ளனர்.

இப்போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார் Shi Yide.

காசநோயின் தாக்கத்தால் 1990 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற Shi Yide, 2006ம் ஆண்டு முதல் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து வருகிறார்.

தொடர் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல் உட்பட தடகளப் போட்டிகளில் இதுவரையிலும் ஏழு பதக்கங்களை வென்றுள்ளார்.

வயது என்பது எண் மட்டுமே, திறமை ஒன்று தான் முக்கியம் என்பதற்கு எடுத்துக்காட்டான உதாரணம் தான் Shi Yide.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்