வீரர்கள் பேருந்து மீது கல்வீசி தாக்குதல்: இந்திய ரசிகர்கள் குறித்து பேசிய அவுஸ்திரேலிய வீரர்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
Seylon Bank Promotion

அவுஸ்திரேலிய வீரர்களின் பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், இந்திய ரசிகர்கள் சிறப்பானவர்கள் என அவுஸ்திரேலிய வீரர் ஆடம் ஜம்பா கூறியுள்ளார்.

இருதினங்களுக்கு முன்னர் இந்தியாவின் கவுஹாத்தியில் நடைபெற்ற இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.

போட்டிக்கு பின்னர் அவுஸ்திரேலிய வீரர்கள் சென்ற பேருந்து ஹொட்டலுக்கு திரும்பி கொண்டிருந்த போது அதன் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில், ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கினாலும் அதிர்ஷ்டவசமாக வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து அவுஸ்திரேலிய வீரர் ஆடம் ஜம்பா கூறுகையில், இது ஒரு பயங்கரமான சம்பவம். இது போன்ற சம்பவங்கள் நடக்க கூடாது.

இந்திய ரசிகர்கள் மிக சிறப்பானவர்கள். அவர்கள் கிரிக்கெட்டை மிகவும் நேசிப்பதுடன், கிரிக்கெட் என்றால் உணர்ச்சி மிகுந்தவர்களாக காணப்படுகின்றனர்.

ஆனால் யாரோ ஒருவர் அதை கெடுத்து விடுகிறார் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்