கொம்மந்தறை இளைஞர் வி.கழகத்தின் தேசிய ரீதியிலான மென்பந்தாட்ட சுற்றுப் போட்டி: பங்குபற்ற நீங்கள் தயாரா?

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

கொம்மந்தறை இளைஞர் வி.கழகத்தின் நடப்பு வருடத்திற்கான மென்பந்தாட்ட சுற்றுப் போட்டி முழுமையாக மின் ஒளியில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி தொடர் 6ஓவர்கள் 8நபர் கொண்டதாக அமைய இருக்கின்றது.

இதில் முதலாம் இடத்தை பெறும் அணிக்கு 50000ரூபா பணப் பரிசிலும் வெற்றிக் கேடயமும்இ இரண்டாம் இடத்தை பெறும் அணிக்கு 15000ரூபா பணப்பரிசிலும் வெற்றிக் கேடயமும் வழங்கப்படும்.இதற்கான இறுதி விண்ணப்பங்கள் வரும் 20ம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

மின்ஒளியிலான போட்டித் தொடருக்கு உங்கள் அணிகளை பதிவுசெய்யும் இடங்கள்.....

யாழ்ப்பாண பிரதேச அணிகள் ஒலிம்பியா, sport world ஆகிய Sports கடைகளிலும் வலிகாம பிரதேச அணிகள் சுன்னாகம் Fashion park கடையிலும் வடமராட்சி அணிகள் 20-20 sport center மற்றும் sahan' s farm (ஞானம்ஸ்) நெல்லியடி ஆகிய இடங்களில் போட்டி கட்டணத்தை செலுத்தி எமது விண்ணப்ப படிவங்களை பெற்று அதில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைக்கு ஏற்ப செயற்படுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இலங்கையில் எப்பாகத்திலும் இருந்து அணிகள் கலந்து கொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

தொடர்புகளுக்கு :- ஜோசப் 0775175462

தயாபரன் 0771529308

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்