கிண்ணம் வென்றது மனோ குயின்ஸ் அணி

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

மனோகரா விளையாட்டு கழகம் தனது 90ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்திய மனோ பிறீமியர் லீக் கிண்ணத்துக்கான வலைப்பந்தாட்டத்தில் பெண்கள் பிரிவில் மனோ குயின்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்தது.

மனோகரா விளையாட்டுக் கழக மைதானத்தில் அண்மை யில் இந்த இறுதியாட்டம் இடம்பெற்றது. மனோ குயின்ஸ் அணியை எதிர்த்து மனோ சின்றல்லாஸ் அணி மோதியது.

ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய குயின்ஸ் அணி 15:12 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்று சம்பியனானது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்