மணிநொடிகளில் மரணபாதைக்கு சென்றிருப்பேன்: செரினா வில்லியம்ஸ்

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasri.com

இறைவனது படைப்பில் இறைவியாக தோன்றும் பெண்களின் பிரசவகாலம் ஓர் மறுஜென்மம் தான். ஒவ்வொரு பெண்மணியும் கருவில் சுமந்து தன் குழந்தையை பெற்றெடுக்கும் போது தாய் எனும் அன்பான அந்தஸ்தை பெற்று உலகின் தாரக மந்திரமாக விளங்குகின்றனர்.

சமீபத்தில் குழந்தை பெற்ற பிரபல டென்னிஸ் வீராங்கனையான செரினா வில்லியம்ஸ், மரணப்பாதையின் எல்லை வரை சென்று வந்ததாக கூறினார். அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்த பிறகு அவரது உடலில் ரத்தக்கட்டிகள் உருவானதாம்.

முதலில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்று கூறிய மருத்துவர்கள், பின்னர் சி.டி-ஸ்கேன் மூலம் நுரையீரலில் ரத்தக்கட்டிகள் இருப்பதை கண்டறிந்து வைத்தியம் செய்தனர் என்று குறிப்பிட்டார்.

அன்மையில் தனக்கு பிறந்த குழந்தையுடன் "வோக்" இதழுக்கு அளித்த பேட்டியில் தனது மகளின் பெயர் ஒலிம்பியா என்றும் குறிப்பிட்டுள்ளார் செரினா.

மேலும் ஸ்கேன் எடுக்காமல் இருந்திருந்தால் நானும் அவதிபட்டிருப்பேன் எதுவும் நடந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் நடந்த புள்ளிவிவர ஆய்வின் படி பிரசவதிற்கு பின்னர் கறுப்பின பெண்களின் இழப்புவிகிதம் அதிகமாக உள்ளதாம் என்று ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்