மகள் ஜிவாவின் பள்ளியில் டோனி: வைரல் வீடியோ

Report Print Harishan in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனி தனது மகளின் பள்ளி விழாவில் கலந்துகொண்ட காட்சிகள் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் தென்னாப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் ஓய்வில் இருந்த டோனி, தனது ஆசை மகள் ஜிவாவின் முதலாம் ஆண்டு பள்ளி விழாவில் மனைவி சாஷியுடன் கலந்து கொண்டுள்ளார்.

பள்ளி ஆண்டுவிழாவில கலந்து கொள்வதற்காக அழகிய இளவரசி போன்ற ஆடை அணிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் டோனியின் மகள் ஜிவா.

மேலும் தனது மகளின் நண்பர்களிடம் அவர் சிரித்து பேசும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்