உயிருக்கு போராடும் WWE மல்யுத்த ஜாம்பவான்: பிரார்த்தனை செய்ய கோரிக்கை

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

WWE ஜாம்பவான் டைப்பூனின் உடல் நிலை மோசமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

WWE மல்யுத்த போட்டிகளில் ஜாம்பவானாக திகழ்பவர் டைப்பூன் என்கிற பிரட் ஓட்மேன் (61). இவர் கடந்த 1980 மற்றும் 1990 காலகட்டத்தில் முன்னணி வீரராக திகழ்ந்து பல்வேறு சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ளார்.

கடந்த 2001-ல் WWE போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற டைப்பூனுக்கு பெரியளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில், சில காலமாக நீரிழிவு நோயினால் டைப்பூன் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவரின் உடல் நிலை மோசமடைந்துள்ளது.

இதையடுத்து டைப்பூன் ரசிகர்களும், சக மல்யுத்த வீரர்களும் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

சக மல்யுத்த வீராங்கனையான லிசா தனது டுவிட்டர் பதிவில், உங்கள் பிரார்த்தனையில் டைப்பூன் பெயரையும் வைத்திடுங்கள், நீங்கள் விரைவில் குணமாக வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

இன்னொரு வீரான லானி போபோ தனது பதிவில், பிரட்டுக்கு பிரார்த்தனைகள் தேவை என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்