ஓர் ஆண்டிற்குப் பிறகு மல்யுத்தத்திற்கு திரும்பிய அண்டர்டேக்கரின் எச்சரிக்கை

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்
186Shares
186Shares
lankasrimarket.com

பிரபல மல்யுத்த விளையாட்டான WWE Raw-வில், ஓர் ஆண்டிற்கு பிறகு மீண்டும் திரும்பியுள்ள அண்டர் டேக்கர், அதிரடியான அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளார்.

உலக ரசிகர்களிடையே பிரபலமான மல்யுத்த விளையாட்டான WWE Raw-விற்கு, இந்த ஆண்டு 25வது ஆண்டாகும்.

இதனையொட்டி, பிரபல மல்யுத்த வீரர்கள் அனைவரும், வரும் 28ஆம் திகதி நடைபெற உள்ள Royal Rumble போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு நடந்த Wrestlemania போட்டியில் தோற்கடிக்கப்பட்ட பிரபல வீரர் அண்டர் டேக்கர், ஓர் ஆண்டு இடைவெளிக்கு பின்னர் தற்போது மீண்டும் WWE Raw-விற்கு அவர் திரும்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தன்னை கடந்த முறை தோற்கடித்த வீரர்களான ஸ்டோன் கோல்டு, மிக் ஃபோலி மற்றும் தனது சகோதரர் கெயின் ஆகியோரை இம்முறை தான் வீழ்த்த காத்திருப்பதாகவும், அவர்களின் ஆன்மாவை தான் சாந்தி அடைய வைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்